நாளை சென்னையில் அம்மா உணவகங்கள் செயல்படுமா?

நாளை சென்னையில் அம்மா உணவகங்கள் செயல்படுமா? 

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இந்நிலையில் சென்னையில் நாளை அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அம்மா உணவகங்கள்:

சென்னையில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் இலவசமாக உணவு வழங்கப்படுமா அல்லது கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. மேலும் நாளை அம்மா உணவகங்களில் காலை இட்லி, மதியம் கலவை சாதங்கள் மற்றும் இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் போன்றவற்றை தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 25) ஞாயிற்று கிழமை அம்மா உணவகம் செயல்படும்

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவுவதால் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 25) ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை வழக்கம் போல் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.