ஆன்லைன் தேர்வுகள்:
நவம்பர் மாதம் முதல் இளநிலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகளுக்கான அனைத்து பருவத் தேர்வுகளும் நேரடியாகவே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில் பழையபடி எழுதுவார்கள்.
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த 1 ஆண்டாக கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.
மேலும் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் போது அனைத்து கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!