நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுமா முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகளும் திறப்பட்டால் ஒரு புறமும் மக்கள் கூட்டமும், மறுபுறம் மாணவர்கள் கூட்டமும் அதிகரிக்கும்.

இன்னும் தொற்று முழுமையாக குறையாத நிலையில் இவ்வாறு பொது இடங்களில் அதிகரிக்கும் கூட்டம் மீண்டும் தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்கும். அதனால் பண்டிகை முடிந்தவுடன் பள்ளிகளை நவம்பர் 8ம் தேதி திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாளை தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அதற்கு விடுமுறை அளிக்க வேண்டி வரும் அதனால் 1- 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுமா? என்று பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!