இலவச பேருந்து பயணம் இனி காவலர்களுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் நகர பேருந்துகள், குறைந்த தொலைவு இயங்கும் சாதாரண பேருந்துகளில் மகளிர் பயணிக்க இலவசம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இதற்கான பிரத்யேக டிக்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அடையாள அட்டையை காட்டி பேருந்தில் பயணம்:

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பேருந்துகளில் காவலர்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கடைநிலை காவலர் முதல் ஆய்வாளர்கள் முதல் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காட்டி பேருந்தில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.