முதல்வர் மு.க ஸ்டாலின் முழு ஊரடங்கை கடைபிடிக்க  மக்களுக்கு வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று  பரவல் அதிகரிப்பதன் காரணமாக நாளை மறுநாள் திங்கள் கிழமை முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து மக்களும் முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து காணொலி வாயிலாக தமிழக மக்களிடம் முதல் – அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் கூறியிருப்பதாவது,

இரண்டு வாரங்களில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டால், கட்டுப்படுத்துவது சவாலாகிவிடும். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. இது கஷ்டமான காலம்தான், ஆனால் கடக்க முடியாத காரியமல்ல. ஊரடங்கினை மக்கள் அனைவரும் கடைபிடித்தால்  மட்டுமே கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.