தமிழகத்தில் 6 மாவட்டங்களில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு!!

கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை இந்த 6 மாவட்டங்கலில் தீவிரமாக பரவி  வருவதால் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தொற்று நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த  உள்ளது. குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.