அரசுப்பேருந்தில் ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பேருந்தில் ஆய்வு:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரப்படும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து பொதுமக்களிடம் பேசினார்.

தொடர்ந்து, அங்கிருந்து தலைமை செயலகம் புறப்படும் முன்னர், கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், பெண் பயணிகளிடம் பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!