தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு!! சென்னை உயர் நீதிமன்ற அறிவிப்பு!!

சென்னை உயர் நீதிமன்ற தகவல்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் மே 1ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டன உள்ளது.

தலைமை செயலாளர் ஆலோசனை:
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
  • இதற்கிடையில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
  • இது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் ஆளுநர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
நீதிபதிகள் விசாரணை:
  • மே 1ம் தேதி முழு ஊரடங்கு தேவையில்லை.
  • மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

நீதிபதிகள் முழு ஊரடங்கு தொடர்பான இறுதி முடிவினை நாளைக்குள் அறிவிக்க கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைக்கின்றன.