தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் அதிரடி அறிவிப்பு!!

தலைமை செயலர் அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு வசதியாக இனி அனைத்து அலுவலர்களும் மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க வேண்டும் என தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அலுவல் கையேடு: 

இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டிக்கு தலைமை செயலர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் புதிதாக சேரும் அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ள மாவட்ட அலுவல் கையேடு வழங்கப்படுவது அவசியம் ஆகும்.

இந்த கையேடு நடைமுறை கடந்த 1973 ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த்துறை மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் அரசுத்துறையில் புதிதாக சேரக் கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பணிக்கான நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இது தொடர்பான சந்தேகங்களை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!