நவ.1ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்….!!

அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்:

நவ.1ஆம் தேதியில் இருந்து ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் இன்று(அக்.29) செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், நவம்பர் 1ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் காலை முதல் மாலை வர முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஆன்லைன் வழியில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் படிக்கலாம்.

மேலும், பள்ளிகளில் வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வர  வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் பெற்றோர்கள் விருப்பப்படி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!