மளிகை டெலிவரி:
இந்தியாவின் முன்னணி உணவு வர்த்தக நிறுவனமான ஜொமேட்டோ தனது தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தற்போது புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகை பொருட்களையும் டெலிவரி செய்ய தொடங்கி உள்ளது. தற்போது இதன் சோதனை ஓட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது உணவு வாங்க வேண்டும் என்றால் எங்கும் தேடி அலைய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் வாயிலாக உணவை ஆர்டர் செய்யலாம். அந்த வகையில், உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமேட்டோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆர்டர் செய்த 30 நிமிடங்களில் உணவு வீடு தேடி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஜொமேட்டோ ஊழியர்கள் மக்களுக்கு உணவு டெலிவரி செய்து வந்தனர்.
டெல்லி NCR இல் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தற்போது இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்த நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பைலட் திட்டத்தில் உள்ளவர்கள் Zomato இன் பிரதான செயலியில் Blinkit மூலம் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ.150 க்கு ஆர்டர் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!