கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி!! யாருக்கு கிடையாது? முழு விவரம்!!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவைகள் குறைந்த வட்டியில் தங்க நகைகளுக்கான அடமான கடன்களை வழங்குகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

யாருக்கு நகை கடன் தள்ளுபடி, யாருக்கு கிடையாது

  • ஒரு குடும்ப அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக பெற்ற கடன் மொத்தமாக 5 சவரனுக்கு கீழ் இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் பெற்ற 5 சவரன் நகைக்கடன்கள் நிபந்தனைக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்
  • ஆதார் எண் அடிப்படையில் ஒரே நபர் அல்லது குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • 2021ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன்பெற்றவர்களது நகைக்கடன் தள்ளுபடி இல்லை.
    எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
  • அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
  • கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு கடன் தள்ளுபடி பொருந்தாது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!