பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் திடீர் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டில் நின்று பயணம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் தொடர்ந்து படிக்கட்டில் உயிர் இழப்பு மற்றும் பெருக்காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அபாயகரமான முறையில் பயணம் செய்வது குறித்து நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளின் மூலம் தெரிய வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பாதுகாப்பாக சென்று வர அனைத்து துறை கள அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துத் துறை ஆகிய தொடர்புடைய அலுவலர்கள் இது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீதும் விதி மீறல்களில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் அனுமதி சீட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!