பிஎட் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

கல்லூரிக் கல்வி இயக்கக அறிவிப்பு

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர இன்று முதல் வரும் 22ம் தேதி வரை http://tngasaedu.in & http://tngasaedu.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய  தளம் மூலம்:

இணைய  தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவ-மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது தங்கள் விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.