தமிழக விவசாயிகளுக்கான போட்டிகள் முதல் பரிசு ரூ. 2 லட்சம்! உடனே பாருங்க!

விவசாயிகளுக்கு பரிசு:

தமிழக அரசு, வேளாண்மை தொழிலையும் விவசாயிகளையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தலைமையிலான அரசு முதல் முதலாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் 2021-2022ம் நிதியாண்டில் வேளாண்மைக்கு ரூ. 34,220.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாய திட்டப் பணிகளுக்காக ரூ. 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி புதிய விவசாய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்க பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

அதே போல வேளாண் பணிகளை எளிதாக்கும் இயந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், 2ம் பரிசாக 60,000, 3ம் பரிசாக 40,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவில் விளைபொருள் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு ரூ. 2 லட்சம், பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் உழவன் என்ற ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!