தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் – விரைவில் அரசு அறிவிப்பு?

கணினி அறிவியல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் சுமார் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

அரசு திட்டம்:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அடுத்த கல்வியாண்டில் கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பள்ளி கணினி ஆசிரியர்கள் தெரிவிப்பு:

கணினி ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் கணினி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் திட்டம்:

கணினி அறிவியல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் சுமார் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இத்திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!