மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் 19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக 64 ஆயிரத்து 900 பேர் விண்ணப்பித்தனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 676இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 832 இடங்களும் உள்ளன.

19 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் நேற்று வெளியிட்டார். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் முதல்கட்ட இணைய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதில், முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் இன்று பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!