விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேஷன் பொருளை வழங்க நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!!!

தமிழகத்தில் தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரேஷன் பொருட்கள்:

  • தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருளை வழங்க வேண்டும்.
  • தொழில்நுட்பக்கோளாறால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருளை தர வேண்டும்.
  • ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • முதியோர், மாற்றுத்திறனாளிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால் உடனடியாக பொருட்களை அளிக்க வேண்டும்.
  • கடைக்கு வருவோரிடம் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து கனிவுடன் விரல் ரேகையை சரிபார்க்கவும் அறிவிருத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!