இனி ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை!! மத்திய அரசு திட்டம்!!

நாடு முழுவதும் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அதனைப் போலவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளதால்  நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிறிய எரிவாயு சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று மெய்நிகர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!