இந்தியாவில் குறையத் தொடங்கும் கொரோனா! இன்று வந்த தகவல்…

இந்தியாவில் ஒரேநாளில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிலவரம்:

சனிக்கிழமை 4.01 லட்சம், ஞாயிறு அன்று 4.03 லட்சமாக இருந்த பாதிப்பு நேற்று 3.66 லட்சமாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3, 29, 942  ஆக குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,29,92,517ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 3,876 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,49,992ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்த 3,56,082 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 17,27,10,066 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.