இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இவ்வளவா? – அதிர்ச்சியில் மக்கள்!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.32 லட்சமாக உயர்ந்தது- ஒரே நாளில் 2,263 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிவேகம்:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,263 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.

2020 ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

உலக அளவில் நோய்த்தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!