புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் கொரோனா நிவாரணம்

புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 3000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நிவாரண நிதி:

கொரோனா 2 ஆம்  அலையின் தாக்கம் வேகமாக பரவி வருவதால். புதுச்சேரியில் நேற்று (மே 25) ஒரு நாள் மட்டும் 1,237 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதன் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 14,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். தவிர இதுவரை ஏற்பட்டுள்ள பலி எண்ணிக்கை 990 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக 3,000 ரூபாய் வழங்க முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். முதல்வரின் இந்த முடிவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது.இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் இம்மாத துவக்கத்தில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவலின் வேகம் உயர்ந்து வந்த காரணத்தால், மே 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறை பிறப்பிக்கப்பட்டது.