தமிழ்நாட்டில் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ்:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணத்தினால் நடைமுறைப்படுத்தி உள்ள கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா மிகவும் பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள மாநில அரசுகளே கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் பற்றிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மே மாதம் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரதமர் மோடி, மாநில அரசுகளின் அதிகாரிகள், ஆட்சியர்கள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழக அரசு அறிவித்துள்ள டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம் இடம் பிடித்துள்ளது. இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க பல சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பயணிக்க ஆம்புலன்ஸ் வசதி குறைவாக உள்ள நேரத்தில் இந்த திட்டம் மூலமாக பல நோயாளிகள் பயனடைவார்கள்.