தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு:

கொரோனா பரிசோதனைக்காக தனியார் பரிசோதனை மையங்கள் வசூலித்து வந்த கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணத்தினால் தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக அளவிலான கட்டணங்களை வசூலித்து வருவதாக தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்து வந்தது. இதனை முறைப்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக அளவிலான கட்டணங்களை வசூலித்து வருவதாக தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்து வந்தது. இதனை முறைப்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக்கூடங்களில் இதுவரை ரூ.1,200 ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ரூ.800 ஆக இருந்து ரூ.550 ஆக குறைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.