குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி:

மத்திய அரசு கூடிய விரைவில் 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த தடுப்பூசி திட்டத்திற்காக நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இத்தகைய குழு தலைமையில் 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது பற்றி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அத்தகைய ஆய்வின் முடிவாக 2 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய அறிக்கையை மருந்துகள் தர சரிபார்ப்பு அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் அவர்கள் அதனை ஆய்வு செய்து அதாவது இத்தகைய தடுப்பூசி செலுத்துவதால் பக்க விளைவுகள் ஏதும் நிகழாது என்பதை சரிபார்த்த பின்னர் ICMR க்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே நடப்பு அல்லது அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணி தொடங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!