கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? புதிய விதிமுறைகள் இதோ

கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு:

இந்தியாவில் மக்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்வது அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பண மோசடிகளும் நடந்து வருகிறது. நீங்கள் எதிர்ப்பாராத விதமாக உங்களின் கார்டை தொலைக்க நேரிட்டால் உடனே வங்கிக்கு தகவல் தெரிவித்து கார்டை பிளாக் செய்ய வேண்டும். இல்லையெனில் மோசடி செய்யும் நபர்களால் கார்டு கைப்பற்றப்பட்டு வங்கி கணக்கில் உள்ள பணம் கையாடல் செய்யப்படும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் மோசடிகள் நடப்பதை தடுக்க மத்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறை வரும் அக்.1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் வங்கிகள் கிரெடிட் கார்டு பெற்ற வாடிக்கையாளர்களிடம் OTP வாயிலாக ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் அந்த கிரெடிட் கார்டை ரத்து செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து நீங்கள் கார்டு பெறும் போது வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு வரம்பை வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் மாற்றக்கூடாது. மேலும் செலுத்தப்படாத கட்டணங்கள்,பிற கட்டணங்கள், கார்டுக்கான வரி போன்றவைக்கு கூட்டு வட்டி மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.