ஜூன் 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஜூன் 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக நேற்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை அங்கு 4,871 பேர் தொற்றினால் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் அங்கு 1,394 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,31,811 பேருக்கு கொரோனா தொற்று மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் 15,000 – 20,000 வரை இருந்த தொற்று பாதிப்பு 2,000 வரை குறைந்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

  • மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் உள் – மாநிலங்களின் பேருந்துகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
  • தனியார் வாகனங்கள் செயல்பட இ- பாஸ் அவசியம்.
  • ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அரசு தடை அறிவித்துள்ளது.
  • சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ், ஸ்டேடியங்கள், ஜிம்னாசியம், நீச்சல் குளங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவையும் மாநிலத்தில் மூடப்பட்டுள்ளன.
  • அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள், வேளாண்மை, தொழில்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு ஊரடகில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கல்வி மையங்களும், பயிற்சி நிறுவனங்களும் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.