பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு என அமைச்சர் விளக்கம்!!

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு:

பள்ளிகள் திறப்பு தாமதமாகும் சூழலில் 1 முதல் 12-ம் வகுப்புவரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது  என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

மேலும் ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 98% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், எஞ்சிய 2% பேர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் பாடத்திட்டங்களும் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பள்ளி திறக்கும் முடிவு ஆரம்பக் கல்வி பெற முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்டும் ஒரு நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு:

இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!