TNPSC குரூப் 4 தேர்வுக்கான தேதி இன்று அறிவிப்பு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2021:

TNPSC குரூப் 4 தேர்வு 2021 பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

குரூப் IV சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு:

TNPSC குரூப் IV தேர்வுக்கான அறிவிப்புகள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

தமிழக அரசு நடத்தும் TNPSC குரூப் IV தேர்வுகளை எழுதுவதற்கு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழி குறித்த அறிவு இருக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

அதில் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை செயல்முறைகள் நடைபெறும்.

குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், VAO, பில் கலெக்டர், கள ஆய்வாளர், தட்டச்சர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான, TNPSC குரூப் IV தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது.

TNPSC குரூப் IV தேர்வுக்கான காலிப்பணியிடங்கள்:

TNPSC குரூப் IV தேர்வுக்கான மொத்தம் 6491 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!