பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30 ஆம் தேதிக்குள் முடிவு!

பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை:

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து வருகிற அக்.30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், மற்றும் சிலர் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.

வரும் 30-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!