நவ.29ம் தேதி DEE தேர்வு முடிவுகள் வெளியீடு!! மறுகூட்டல் விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வானது கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வரும் நவ.29ம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவுகள்:

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடைத்தாள் நகல் பெற மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து (விடைத்தாள் நகல் ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.275, மறுகூட்டல் ஒரு பாடத்திற்கு ரூ.205) விண்ணப்பத்தினை குறிப்பிட்டுள்ள தொகையுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தை டிச.1 காலை 10 மணி முதல் டிச.4ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!