ஆதார் அட்டையை தவறவிட்டீர்களா!! கவலை வேண்டாம்!! இதோ திரும்ப பெற ஒரு புது ஐடியா!!

நாடு முழுவதும் ஓவ்வொரு  குடிமகன்களுக்கும் தற்போது ஆதார் அட்டை  அவசியமாகியுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையை தவறவிட்டீர்களா? அதற்க்காக  வருத்தப்பட தேவையில்லை.

ஆதார் அட்டையை திரும்ப பெற:

ஆதார் அட்டையை தவறவிட்டவர்களுக்கு அதை மீட்க UIDAI இணையதளத்தை பயன்படுத்தலாம். UIDAI இணையதளத்தில் சென்று சில வழிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிதாக ஆதார் அட்டையை திரும்ப பெறலாம்.

அதற்கான வழிமுறைகள் இதோ:
 • முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://eaadhaar.uidai.gov.in/ செல்லுங்கள்.
 • அதற்கு  பின்னர், ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய மூன்று விருப்பங்கள் கேட்கின்றன.
  முதலாவதாக பனிரெண்டு இலக்க ஆதார் எண்ணும்,
  இரண்டாவதாக சேர்க்கை ஐடியும்  ,
  மூன்றாவதாக மெய்நிகர் ஐடியும் கேட்கும்.
 • மூன்றில்  ஏதாவது  ஒன்றை  கொடுத்து, பதிவிறக்கம் செய்யலாம்.
 • அதன் பின்னர் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை (Type)டைப்  செய்து அனுப்ப வேண்டும்.
 • OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • நீங்கள் ஆதார் அட்டை எடுக்கும் போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
 • பின்னர் உங்களது ஆதார் எண்ணின் மின்னணு நகல், சரிபார்ப்பு செய்ய பதிவிறக்கம் விருப்பத்தை வழங்க வேண்டும்.
 • ஊங்களுக்கு விருப்ப யென்றால் லேமினேஷன் செய்துதரப்படும் இதற்கு நீங்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • ஆர்டர் செய்து வீட்டிற்கே தபால் மூலமாகவும்  பெறலாம்.