நவம்பர் 8 முதல் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்!! அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் ஒத்திவைத்து நவம்பர் 8 முதல் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தொடக்க நிலையில் உள்ள மாணவர்கள் கற்றலில் பின்னடைவை சந்தித்துள்ளனர் இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதை பற்றி ஆலோசனை நடத்தி நவம்பர் 1 முதல் 1-8 வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நம் மாநிலத்தில் கொரோனா முழுமையாக குறையவில்லை, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகிறது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த நேரத்தில் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இத்தகைய கட்டத்தில் மாணவர்கள் வெளியில் செல்வதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏற்கனவே மூன்றாம் அலை கொரோனா குழந்தைகளை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 1ம் தேதி அன்று பள்ளிகளை திறக்காமல் பண்டிகைக்கு பிறகு நவம்பர் 8ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!