பொறியியல் மாணவர்களுக்கான நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு!

அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிப்பு:

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் விடுத்த கோரிக்கை இதன்மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இது  நேரடியாகவே நடைபெறும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு ஆஃப்லைனில் தேர்வு வைத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மாணவர்கள் போராடியதை தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் கல்லூரிகளுக்கு சென்று உங்கள் சேர்க்கையை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!