அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் கணக்கெடுப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை: 

அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை, ஆக., 1ம் தேதி நிலவரப்படி,மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி,கணக்கெடுக்க வேண்டும். வகுப்பு வாரியாகவும், தமிழ், ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை:

இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வி துறையில், கல்வி மேலாண்மை, ‘டிஜிட்டல்’ தளமான, ‘எமிஸ்’ வழியாக, ‘ஆன்லைனில்’ பதிவு செய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு:

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணகெடுத்து அதை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆசியர்களின் அறிவுறுத்தல்:

அதனால் சுழற்சி முறையில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்கள் வழங்குதல், பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!