கூட்டுறவு வங்கியில் நகைக்களுக்கு தள்ளுபடி!!! முழு விவரம் உள்ளே!!!

கூட்டுறவு வங்கி:

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளில், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியும் ஒன்று. வேறு வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை அவசரமாக திருப்பிய பலர், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

இப்போது தேர்தலும் முடிந்து, ஆட்சியும் அமைத்தாயிற்று. எப்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வார்கள் என்று, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள், அன்றாடம் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

சில நிபந்தனைகளைலோடு கூட்டுறவுத்துறை அதிகாரிகள்:

  • நகைக்கடன் பெற்ற கடனாளிகள், உண்மையாகவே ஏழைகளாக இருக்க வேண்டும்.
  • கடன் பெற்றவர் அண்ணன், தம்பி, மகன் இப்படி எந்த உறவுகளும் அரசுப்பணியிலோ, அரசு சார்பு அமைப்புகளிலோ, அரசு பென்ஷன்தாரராகவோ இருக்கக்கூடாது.
  • அவர்கள் பெயரில் கார் இருக்கக்கூடாது.
  • நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, நகை கடனில் தள்ளுபடி இல்லை.
  • விவசாயக்கூலிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
  • கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் பெயரில் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
  • மத்திய அரசுப்பணி, வருமானவரி செலுத்துவோருக்கு தள்ளுபடி இல்லை.
  • இப்படி ஏராளமான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும், அரசு கூட்டுறவுத்துறைக்கு விதித்துள்ளது.

பயனாளிகள் 5 சவரன் நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களை கூட்டுறவு வங்கிகளிடம் அரசு கேட்டுள்ளது. வரும் 16ம் தேதிக்குள் பயனாளிகளின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்தில் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. பயனாளிகள் கேஒய்சி, ஆவணங்கள், குடும்ப அட்டை விவரங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!