பள்ளிகளில் இன்று முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!!

தேர்வுத் துறை இயக்குநர் தகவல்:

இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.

அசல் சான்றிதழ்:

மாணவர் அல்லது பெற்றோர் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

10ம் வகுப்பில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்கள் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ்கள் மொத்தமாக வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று நேரடியாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!