செப்.1 முதல் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

தமிழக அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உடல்நிலை அவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்க ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களை சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • ஹாஸ்டலில் தங்கும் மாணவர்களுக்கு புதிதாக படுக்கை வசதிகள் செய்து தர வேண்டும்.
  • வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும்.
  • காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் கைகளை சுத்தம் செய்வது, தடுப்புகள் அமைத்து மாணவர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் வழி வகுக்க வேண்டும்.
  • தொற்றால் பாதித்த மாணவர்களை பள்ளிக்கு வராமல் வீட்டிலிருக்க அறிவுறுத்த வேண்டும்.
  • உடல் வெப்பநிலை அறியும் கருவி, ஆக்ஸி மீட்டர் போன்ற கருவிகளை பள்ளி தொடங்கும் முன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
  • பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்பது, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!