தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படுமா?செயல்படாதா?

தமிழக ரேஷன் கடைகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் வரும் 24 தேதிக்கு பிறகு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலத்தில் ரேஷன் கடைகள் செயல்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் முன்னர் அறிவித்திருந்த முழு ஊரடங்கு  முடிய இருந்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டதால் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்தது.

இந்த காலத்தில் எந்த விதமான கடைங்களும் திறந்திருக்க அனுமதி இல்லை. மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தீவிர ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கிராமப்புற பகுதிகளில் தோட்டக்கலைத்துறை, உள்ளாட்சித்துறை, அரசு அதிகாரிகள் மூலம் ஒருவார காலத்திற்கு காய்கறிகள் வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலத்தில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.