தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பணியில் சேர விருப்பமா?

தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பு பணியில் சேர விருப்பமா:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து செயல்பட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். நோய் தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை தமிழக முதல்வர் நியமித்து உள்ளார்.

வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் லஷ்மிபிரியா ஐஏஎஸ், பொதுத்துறை (சட்டம் ஒழுங்கு) அரசு துணைச் செயலாளர் எஸ்.பி.அம்ரித் ஐஏஎஸ், தமிழக ஊராக புத்தாக்கத்திட்ட மாவட்ட வருவாய் அலுவலர், எஸ். சாந்த குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்பும் நபர்கள் ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து தன்னார்வ பணிகளில் ஈடுபடலாம். மேலும், ஒருங்கிணைப்பு குழுவை தொடர்பு கொள்வதற்கு 8754491300 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tnngocoordination@gmail.com மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.