மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை சற்று சரிவை எட்டியுள்ளது.

 காய்கறிகள் விலை குறைப்பு: 

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் காய்கறிகளுக்கான தேவைகள் சற்று அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் காய்கறிகள், பழங்கள் போன்ற சத்தான உணவுகளை மக்கள் அதிகம் எடுத்துக்கொள்ள துவங்கியுள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை எவ்வளவு: 

 1. தக்காளி – ரூ.5
 2. வெங்காயம் – ரூ.10
 3. அவரைக்காய் – ரூ.60
 4. பீன்ஸ் – ரூ.55
 5. பீட்ரூட் – ரூ.10
 6. வெண்டைக்காய் – ரூ.35
 7. நூக்கல் – ரூ.25
 8. முள்ளங்கி – ரூ.10
 9. புடலங்காய் – ரூ.8
 10. சுரைக்காய் – ரூ.8
 11. கேரட் – ரூ.30
 12. பாகற்காய் – ரூ.18
 13. கத்தரிக்காய் – ரூ.10
 14. குடை மிளகாய் – ரூ.15
 15. தேங்காய் – ரூ.25
 16. வெள்ளரிக்காய் – ரூ.15
 17. காளிபிளவர் – ரூ.20
 18. உருளைக் கிழங்கு – ரூ.15
 19. சவுசவு – ரூ.10
 20. பச்சை மிளகாய் – ரூ.15
 21. முருங்கைக்காய் – ரூ.30
 22. இஞ்சி – ரூ.30
 23. கோவைக்காய் – ரூ.8