ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!!

தமிழக அரசு அறிவிப்பு:

இதனை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த போது, பனை வெல்லத்தை ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ரேஷன் கடைகளில் 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு விற்பனையாக தமிழ்த்தறி என்ற பட்டுப்புடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாயல்குடியில் ரூ.65 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தை காணொலியில் திறந்தார்.

இதையொட்டி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறும் வகையில் நவம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்கள் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!