தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனி சாமி தேர்வு!

கடந்த மே  மாதம் 7 ஆம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டர். இதனை  அடுத்து எதிர் கட்சி தலைவராக நியமிப்பது யார் என ஆலோசனை நடந்தது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று நடந்த எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.  இதனை அடுத்து தற்போது எதிர்க்கட்சித் தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமியினை தேர்வு செய்தனர்.