பள்ளிகளில் காலாண்டு விடுமுறையில் மாற்றம்! கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதில் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்

காலாண்டு விடுமுறை:

தமிழக பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக பள்ளிகளில் பொது காலாண்டு தேர்வு கிடையாது எனவும், செப். 30 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை புதிய மாற்றத்தை அறிவித்தது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டிற்கான வேலைநாட்கள் மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்பில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறைகள் அக். 5 ஆம் தேதி வரை விடப்படும் எனவும், அதன் பின் அக். 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதாவது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுகிறது.

அதனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி முதல் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட அட்டவணைப்படி அக். 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட பின் உறுதியான முடிவு தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.