ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை திறக்க அனுமதி கிடையாது என கல்வித்துறை அறிவிப்பு?

பள்ளி கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. இதில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன.

சுகாதாரத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில்,எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ரல்லாத பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அவர் சார்ந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆகவே இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களை தடுப்பூசி போட அறிவுறுத்துமாறு அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!