தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி பாட நேரம்!!

தமிழகத்தில் கொரோன பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வீட்டிலேயே மாணவரகள் கல்வி பயில்வதற்கு.கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில்,நாளை முதல் வகுப்பு வாரியாக பாடங்களுக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சி நேரம்:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் நிலை தாக்கம் அதிகமாக இருப்பதால்.அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்படும். கடந்த கல்வி ஆண்டு முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக தான் பாடங்களை கற்றனர் .

மாணவர்களுக்கான இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இரண்டாம் வகுப்பு முதல் ஓன்பதாம் வகுப்பு வரை பாட வாரியான பயிற்சி புத்தகங்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு 22 தேதி முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மே 11ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக புதிய அட்டவணை படி பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.  எது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.