இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

வாக்காளர் அட்டை:

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை ஓட்டு போடுவதற்கு மட்டுமன்றி வேறு பல நிர்வாக பணிகளுக்கும் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால் மீண்டும் அதை பெற காலதாமதம் ஆவது மக்களுக்கு சிரமத்தை அளித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சத்யப்ரதாசாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வாக்காளர்களுக்கு மாற்று வாக்காளர் அடையாள அட்டையை உடனடியாக கிடைக்க செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே வாக்காளர் மாற்று அடையாள அட்டை உடனடியாக மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக இந்த அலுவலகம், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்.