இன்ஜினியரிங் கவுன்சிலிங் அக்.1 முதல் விருப்ப பதிவு துவக்கம்!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் அக்டோபர் 1ம் தேதி முதல் விருப்ப பதிவு தொடங்கவுள்ளது.

பொறியியல் கவுன்சிலிங்:

முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மொத்தம் 6,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவு முதலியன அடங்கும்.

பொது பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் செலுத்தும் வசதி நேற்று தொடங்கிய நிலையில் தரவரிசை பட்டியலில் 14,788 வரை உள்ளவர்கள் மட்டும் 30ம் தேதி மாலை 5:00 மணி வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு அக்.1ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான பதிவு தொடங்கி 2ம் தேதி முடிகிறது. 3ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 5ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!