TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிஎட் படித்த பிறகு கூடுதலாக முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது..

ஆசிரியர் தேர்வு:

இது தொடர்பாக தேர்வு வாரியத்தில் புகார் அளித்த போது விண்ணப்பிக்கும் இணையதளத்தில் கோளாறு என்றும் அவை விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இப்போது வரை சரி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த குளறுபடி பலரின் வேலைவாய்ப்பை பாதிக்கும் அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் போர்க்கால அடிப்படையில் விவரித்து இப்பிரச்னையை சரி செய்ய வேண்டும். மேலும் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு 45 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ள நிலையில் இதை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய இருப்பதாலும்,  ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!