முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!

ஆசிரியர் தேர்வு வாரியம் , சென்னை – 600 006 பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.

நாள் : 21.10.2021 

இந்நிலையில் அரசாணை நிலை எண் .144 பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) ) துறை , நாள் 18.10.2021 ன்படி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!